நீர்மின் உற்பத்தி 50 சதவீதம் வரை அதிகரிப்பு!

புதன் நவம்பர் 13, 2019

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்மட்டத்தை அண்மித்துள்ள நிலையில்,  நாளாந்த நீர்மின் உற்பத்தி 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக, மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

சமனலவெவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 100 சதவீதமாகவும் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 94.6 சதவீதமாகவும் மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 90.5 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

அத்துடன், கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 87.7 சதவீதமாகவும் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 80.2 சதவீதமாகவும் ரன்தெணிகல நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் சத49.2 வீதமாகவும் உயர்வடைந்துள்ளது.