நீர்மூழ்கி கப்பல் 75 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு..!

வியாழன் நவம்பர் 14, 2019

ஜப்பானை தாக்குவதற்காக அமெரிக்கா அனுப்பிய நீர்மூழ்கிக் கப்பல், 75 ஆண்டுகளுக்கு பின்னர் கடலுக்குள் மூழ்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், 1941ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் திகதி, ஐக்கிய அமெரிக்காவின் ஹவாய் மாநில தலைநகர் ஹொனலூலுவின் மேற்கே, ஒவாகு தீவில் அமைந்துள்ள பேர்ல் (Pearl) துறைமுகத்தில் ஜப்பான் விமானப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

இதில் 2 ஆயிரத்து 500 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். அப்போது, ஜப்பான் மீது தாக்குதல் நடத்துவதற்காக 80 பேருடன் யு.எஸ்.எஸ் கிரேபேக் எஸ்.எஸ் 208 என்ற நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா அனுப்பியது.

1944ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26ம் திகதிக்குப் பின்னர், அந்தக் கப்பலில் இருந்து தகவலும் வராததால் அதனைத் தேடும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டது.

கடந்த 75 ஆண்டுகளாக நடந்த தேடுதல் பணியின் விளைவாக, ஜப்பானின் ஒஹினாவா கடல்பகுதியில் அந்த நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கிக்கிடப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.