நீர்மூழ்கி கப்பலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை-ரஷ்யா

சனி ஓகஸ்ட் 24, 2019

ரஷ்ய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், துலா மற்றும் யூரிய் தோல்கோருகி என்ற இரு நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் இரு ஏவுகணைகளான புலாவா மற்றும் சினேவா ஆகியவை இன்று பரிசோதனை செய்யப்பட்டன என தெரிவித்து உள்ளது.

இந்த ஏவுகணைகள் ஆர்க்டிக் பெருங்கடல் துருவ பகுதியில் பேரண்ட்ஸ் கடலில் இருந்து இலக்கை நோக்கி ஏவப்பட்டன.  

அவை ஆர்கான்கெல்ஸ்க் பகுதி மற்றும் காம்சட்கா ஆகிய இலக்கு பகுதிகளை வெற்றிகரமுடன் அடைந்தன.