நீதி­மன்­றத்தில் சேவல் மீது வழக்கு!

ஞாயிறு ஜூலை 07, 2019

பிரான்ஸில் சேவல் கூவி­யதால் அது வளர்க்­கப்­படும் வீட்டின் அருகில் வாழும் தம்­ப­தியர்  அந்த சேவல் மீது நீதி­மன்­றத்தில் வழக்கு தொடர்ந்­துள்­ளனர்.

மோரிஸ் என்ற சேவல் மீதே இவ்­வாறு வழக்கு தொட­ரப்­பட்­டுள்­ளது. இந்த சேவல் ஒலி மாசு­பாட்டை ஏற்­ப­டுத்­து­கி­றது என பிரான்ஸ் தீவு­களில் ஒன்­றான ஒலெ­ரானில் வாழும் ஓய்வு பெற்ற தம்­ப­தி­யி­னரே இவ்­வாறு குற்றம் சாட்­டி­யுள்­ளனர்.

இது தொடர்பில் சேவலின் சொந்­தக்­காரர் கொரீன் ஃபெசௌ குறிப்­பி­டு­கையில், எல்லா சேவல்­களும் என்ன செய்­யுமோ அதை தான் தன்­னு­டைய சேவலும் செய்­வ­தா­கவும்  சேவல் கூவு­வது என்­பது கிரா­மத்து வாழ்க்­கையில் ஒன்று. அதை நிறுத்த வேண்டும் என்­பது கார­ண­மற்ற கோரிக்­கை­யாகும் என்றும் கூறி­யுள்ளார்.

சேவல் மீதான வழக்கு விசா­ர­ணைகள் கடந்த வியா­ழக்­கி­ழமை நீதி­மன்­றத்தில் விசா­ர­ணை­க­ளுக்­காக எடுத்துக் கொள்­ளப்­பட்­ட­போ­திலும், மோரிஸோ அல்­லது மோரிஸின் உரி­மை­யா­ளர்­களோ அதன் மீது குற்றம் கூறி­ய­வர்­களோ நீதி­மன்­றத்­திற்கு  சமு­க­ம­ளிக்­க­வில்லை.

ஆனால் சமீ­பத்தில் உள்­ளூரில் பிர­ப­ல­ம­டைந்த இந்த மோரிஸ் என்ற சேவலின் ஆத­ர­வா­ளர்கள் நீதி­மன்­றத்­திற்கு வெளியே திரண்­டி­ருந்­தார்கள். அவர்­களும் சேவல் வைத்­தி­ருப்­ப­வர்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மேலும் குற்றம் சாட்­டி­ய­வர்­க­ளான  ஜீன் லூயிஸ் பிரொன் மற்றும் ஜோலி அண்ட்­ரியாக்ஸ் 15 வரு­டங்­க­ளுக்கு முன்புசன்­பி­யரிட் ஒரெலான் என்ற இந்த கிரா­மத்தை தேர்ந்­தெ­டுத்­துள்­ளனர். இக் கிரா­மத்தில் நில­விய அமைதி நிலை கார­ண­மா­கவே அவர்கள் இக் கிரா­மத்­தினை தேர்ந்­தெ­டுத்­துள்­ளனர்.

ஆனால் 2017 தொடக்கம் இந்த அமைதி நிலைக்கு இந்த சேவல் இடை­யூ­றாக இருந்து  வந்­துள்­ளது. இந் நிலை­யி­லேயே இது தொடர்பில் அவர்கள் நீதி­மன்­றத்தில் வழக்கு தொடர்ந்­துள்­ளனர்.

இந் நிலையில் மோரிஸை என்ன செய்யவேண்டும் என்பதை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நீதிமன்றத்தில் வரவிருக்கும் தீர்ப்பே முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.