நீதிமன்றம் தவறான தீர்ப்பை வழங்கினால் மறுபரிசீலனை செய்யலாம்

புதன் செப்டம்பர் 16, 2020

 நீதிமன்றம் தவறான தீர்ப்பை வழங்கும் பட்சத்தில் மீண் டும்  குறித்த வழக்கை  மறுபரிசீலனை செய்ய அனுமதி வழங்கப்படும் என அலி சப்ரி தெரிவித்தார்.

ஒரு வழக்கில்  நீதிபதி ஒருவர் தவறான தீர்ப்பை வழங்கி யிருப்பதை நீதிமன்றம் நிரூபித்தால், அவர் குறித்த வழக் கை மறுபரிசீலனை செய்யக் கோரலாம் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அண்மையில் சில நீதிபதிகள் அரசியல்வாதிகளுடன் உரையாடியது குறித்து நீதி ஆணையம் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், நீதிபதிகளுக்கு நீதி அமைச்சகம் பொறுப் பல்ல என்றும் அது ஒரு தனி தன்னாட்சி செயற்பாட்டின் கீழ் செய்யப்படுகிறது என ஊடக சந்திப்பில் அலி சப்ரி தெரிவித்தார்.