நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

வியாழன் செப்டம்பர் 24, 2020

தியாக தீபம் திலீபனின் நினைவாக வவுனியாவிலிருந்து நல்லூர் வரை நடைபணயத்தை ஏற்பாடு செய்தமைதொடர்பில் தமிழ் தேசிய மக்கள்முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கட்டளை வழங்கப்பட்டுள்ளது.

நடைபயணத்தை ஏற்பாடு செய்தமைக்காக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் வவுனியா நகரசபை உறுப்பினர் ஜானுஜன் ஆகியோரை எதிர்வரும் 28ம் திகதி வவுனியாநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கட்டளை வழங்கப்பட்டுள்ளது.