நிலக்கடலை மற்றும் சோள இறக்குமதிக்கு இன்று முதல் முற்றாகத் தடை !

புதன் சனவரி 15, 2020

விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி W.M.W. வீரக்கோன் இதனைத் தெரிவித்துள்ளார்.உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சோள இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட போதிலும், இன்றைய தினத்திற்கு முன்னர் அவற்றை இறக்குமதி செய்யுமாறு விவசாயத் திணைக்களம் வலியுறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.