நினைவு துணை இடித்த பாசிச இலங்கை அரசை கண்டித்து- கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

செவ்வாய் சனவரி 12, 2021

இலங்கையில் யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழீழ மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூணை இலங்கை பாசிச அரசு இரவோடு இரவாக அகற்றியது.

இதனை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர், மேலும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் தலைமையில் நேற்று 300க்கும் மேற்பட்டவர்கள் சென்னை இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டனர்.

இந்நிலையில் இன்று (12/01/2021) கோவை பெரியார் படிப்பகம் முன்பு அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் ஏனைய முற்போக்கு இயக்கங்களும் பங்கேற்றன.