நிறைவுக்கு வந்தது நான்காம் நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்!

புதன் மே 15, 2019

பிரித்தானிய பிரதமர் வாயிற்தளத்திற்கு முன்னால் நடைபெற்றுவருகின்ற முள்ளிவாய்க்கால்

நினைவெழுச்சி வாரத்தின் நான்காம் நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டமானது மாலை 6 மணி அளவில் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

எமது போராட்டத்தின் வெற்றியானது எமது கையில், எமது பலத்தில், எமது உறுதிப்பாட்டிலேயே தங்கியிருக்கிறது. என்ற எமது தேசியத் தலைவரின் சிந்தனையை ஒவ்வொரு ஈழத்தமிழரும் நினைவில் நிறுத்தி இந்த முள்ளிவாய்க்கால் 10ம் ஆண்டு நினைவெழுச்சி வாரத்திலும் 18.05.2019 மாலை 2 மணிக்கு ஆரம்பமாகும்  நினைவெழுச்சிப் பேரணியிலும் கலந்துகொண்டு தமிழீழம் நோக்கி வீறுகொண்டெழுவோம். என்னும் செய்தியினை மக்களுக்கு கூறிக்கொண்டு மாலை 6 மணிக்கு அடையாள உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு திரு. ஏகாம்பரம் அவர்கள் தமிழீழ உணர்வாளர்களான நாதன், துஷாந்தன், சுஜீவன், கௌரீசன், சிவானுஜன்,தனுசாந்த், சயந்தகுமார், கஜன், சயன், தினேஷ் கிருபாகரன் சர்வான் ஆகியோருக்கு பழச்சாறு வழங்கி உண்ணாவிரத்தை நிறைவுக்கு கொண்டுவந்ததனைத் தொடர்ந்து திரு சிவானந்தம்  செல்வகுமரன் அவர்கள்  உறுதிமொழி எடுக்க  இன்றைய நான்காம் நாள் நிகழ்வு நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது.

t