நிருபாமா ராஜபக்ச அவரது கணவர் குறித்து பன்டோரா பேப்பரில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ன?

புதன் அக்டோபர் 06, 2021

சட்டத்துக்கு விரோதமாக வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பினாமி சொத்துகள் வாங்கிக் குவித்த பிரபலங்களின் பெயர்களை பண்டோரா ஆவணங்கள் வெளியிட்டுள்ளது

இதில் உலகின் முக்கிய பிரமுகர்கள் அதிகாரிகள் 300க்கும் அதிகமான பெயர்கள் இடம்பெற்றுள்ளன- 90 நாடுகள் மற்றும் பிரதேசங்களை சேர்ந்தவர்களின் பெயர் விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

ஜனாதிபதிகள் பிரதமர்கள் அரச குடும்பத்தினர் அதிகாரிகள் அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர்கள் எவ்வாறு இரகசிய தீர்ப்பாயங்களில் நிறுவனங்களை உருவாக்கும் நிறுவனங்களின் உதவியுடன் பெருமளவு சொத்துக்களை மறைத்து வைத்துள்ளனர் என்பது குறித்த 11.9 மில்லியன் இரகசிய ஆவணங்கள் வெளியாகியுள்ளன.

நிருபாமா ராஜபக்ச இலங்கையின் ஈவிரக்கமற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது அதிகாரத்திற்கு வந்த இலங்கை ஜனாதிபதியின் உறவினர்.

அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆலோசகராகவும் ஹோட்டல் தொழில்துறையிலும் பணியாற்றியுள்ளார்என அவரது நிறுவனத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் மற்றுமொரு குடும்ப உறுப்பினர் பசில் ராஜபக்சவுடன் இணைந்து ரியல்எஸ்டேட் சம்பந்தமாக மோசடியில் ஈடுபட்டார் என இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

இது குறித்த வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் உள்ளது. நடேசனும் தற்போதைய நீதியமைச்சர் பசில்ராஜபக்சவும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளனர்.

நிருபாமாவும் நடேசனும்லண்டனிலும் சிட்னியிலும் ஆடம்பர தொடர்மாடிகளை தாங்கள் கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்தி செல்நிறுவனத்தை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்.

நடேசன் இரகசிய நியாயாதிக்க எல்லைகளில் செல் நிறுவனங்களையும் அறக்கட்டளைகளையும் ஏற்படுத்தினார்.

அதனை பயன்படுத்தி அவர் இலங்கை அரசாங்கத்துடன் வணிகத்தில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து இலாபகரமான ஆலோசனை ஒப்பந்தங்களையும் கலைப்படைப்புகளையும் பெற்றுக்கொண்டார்.

2018 இல் பசுபிக் கொம்பனிஸ் என்ற நிறுவனம் 31 ஓவியங்களையும் ஏனைய கலைப்படைப்புகளையும் சொத்துக்கள் வரிகளிற்கு உட்படாத மிகவும் பாதுகாப்பான சேமிப்பகமான ஜெனீவா பீரிபோர்ட்டிற்கு அனுப்பிவைத்தது.
நடேசனின் நெருங்கிய ஆலோசகர் ஒருவர் சிங்கப்பூரை சேர்ந்த கடல்கடந்தசேவை வழங்குநரான ஆசியாசிட்எ டிரஸ்டிற்கு அனுப்பிவைத்துள்ள இரகசியமான மின்னஞ்சல்களில் 2011 இல் நடேசனின் சொத்து 160 மில்லியன் டொலர்கள் என தெரிவித்துள்ளது.

இதனை சுயாதீனமாக உறுதிப்படுத்தமுடியவில்லை.