நளினி தற்கொலை முயற்சி! விசாரணை நடத்த பழ. நெடுமாறன் வற்புறுத்தல்

செவ்வாய் ஜூலை 21, 2020

தமிழர் தேசிய முன்னணி

8/119ஏ, டிப்போ லைன், சி.பல்லவபுரம், சென்னை- 600 043.

தொலைப்பேசி-91-44-2264 0451,  தொலை நகலி-91-44-2264 0421.

 

தலைவர் : பழ. நெடுமாறன்                                                                                                             நாள் : 21-07-2020

 

 

நளினி தற்கொலை முயற்சி!

விசாரணை நடத்த பழ. நெடுமாறன் வற்புறுத்தல்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை…

29 ஆண்டு காலத்திற்கும் மேலாகச் சிறையில் வாடி மனம் நொந்துப் போயிருக்கும் நளினிக்கும், சக சிறைவாசிக்கும் ஏற்பட்டப் பிரச்சனையின் விளைவாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வெளியாகியிருக்கும் செய்தி, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இதற்குக் காரணமானவர்கள் யார்? என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்படவேண்டும் என வற்புறுத்துகிறேன்.

உளரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள நளினியை சந்திக்கவும், ஆறுதல் கூறவும் அவருடைய கணவர் மற்றும் குடும்பத்தினரை அனுமதிக்குமாறு அரசை வேண்டிக்கொள்கிறேன்.

 

                                                                                                                                                                                        

 

  அன்புள்ள,                                                                                                                                       

                                                                                           (பழ. நெடுமாறன்)

                                                                                                    தலைவர்