நல்ல கொழுப்புக்களை தரும் முந்திரி பருப்பு!

வெள்ளி மே 31, 2019

*முந்திரியை அப்படியே பச்சையாக சாப்பிட வேண்டும். அதில் உப்பு சேர்த்தாலோ அல்லது மற்ற மசாலாக்களை சேர்த்தாலோ அதன் பலன் இல்லாமல் போய்விடும்.

*நல்ல கொழுப்புக்கள் முந்திரி பருப்பில் அதிகம் நிறைந்துள்ளதால், இவற்றை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் இதயத்தை பாதுகாக்க முடியும்.

*எலும்பு வலுவடைவதற்கு உதவுகிறது. பற்களின் ஆரோக்கியத்தையும், ஈறுகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.
 
*மலச்சிக்கல் தீரவும், வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீரவும் முந்திரி பருப்புகளை அடிக்கடி சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் தீரும்.

*புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுத்து உடல்நலத்தை மேம்படுத்துகிறது.

*முந்திரி பருப்பில் காப்பர் எனும் செம்பு தாதுப்பொருள் உள்ளது. இது முடியின் கருமை நிறத்தைப் பாதுகாத்து. முடி விரைவில் நரைக்காமல் தடுக்கிறது.

*அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது தினமும் முந்திரி பருப்பை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களில் சிறுநீரக கற்கள் உருவாவதைத் சுலபத்தில் தடுக்கலாம்.

*அதிகளவில் புரோட்டீன் இருப்பதால் ஒரு நாள் முழுவதும் களைப்படையாமல் உற்சாகமாக இருக்கலாம்.

தினமும் இதை எடுத்துக் கொண்டு வந்தால் பசியை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.