நண்பர்களுடன் நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்றிருந்த 21 வயதான இளைஞர் பலி!!

சனி ஜூன் 06, 2020

இரத்தினபுரி–பலாங்கொடை,சமனலவெவ நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (06) நண்பகல் 12.30 அளவில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.தனது நண்பர்களுடன் நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்றிருந்த இம்புல்பே பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞர் நேற்று (05) மாலை நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.