நோக்கியாவின் என்ட்ரி லெவல் 5ஜி ஸ்மார்ட்போன்

சனி ஜூன் 20, 2020

நோக்கியா நிறுவனத்தின் என்ட்ரி லெவல் 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் என்ட்ரி லெவல் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை நோக்கியா பிராண்டிங்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது. 

என்ட்ரி லெவல் நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 690 சிப்செட் கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனிற்கான அறிவிப்புடன் புதிய சிப்செட் வெளியிட்டதற்கு குவால்காம் நிறுவனத்திற்கு பாராட்டி தெரிவித்து உள்ளது.

‘தலைசிறந்த 5ஜி அனுபவத்தை குறைந்த விலையில் வழங்க புதிய நோக்கியா போன்களை அறிமுகம் செய்வதில் ஆவல் கொண்டிருக்கிறோம்’ என ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் ஜூகோ சர்விகாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 690 பிராசஸர் கொண்டிருக்கும் என ஜூஹோ தெரிவித்தார். 

 

குவால்காம்

 

புதிய நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் நோக்கியா 8.3 மாடலை விட விலை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நோக்கியாவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இதன் விற்பனை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை துவங்கப்படவில்லை.

நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன் நோக்கியா 6.3 அல்லது நோக்கியா 7.3 பெயரில் அறிமுகமாகும் என தெரிகிறது. மேலும் இது விலை குறைந்த 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும் என கூறப்படுகிறது.