நோர்வே பள்ளிவாசலுக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு !–

ஞாயிறு ஓகஸ்ட் 11, 2019

நோர்வேயில் உள்ள பள்ளிவாசல் ஒன்றினுல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைநகர் ஒஸ்லோவின் புறநகரில் உள்ள அல்-நூர் இஸ்லாமிய தொழுகை இடத்தின் மீது துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக காவல் துறையினர்  தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து பெண்ணொருவர் சந்தேக நபரின் வீட்டில் இறந்து கிடந்தார் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் 20 வயது மதிக்கத்தக்க நோர்வே குடியுரிமையுடையவர் என தெரிவித்த காவல் துறையினர் , அந்த நபர் உறவினரைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த பள்ளிவாசல் மீதான தாக்குதலின்போது அந்த நபர் தனியாக செயல்பட்டதாக காவல் துறையினர் கூறுகின்றனர். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் 75 வயதான சபை உறுப்பினர் என பள்ளிவாசலின் தலைமை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.