நோர்வேயில் நடைபெற்ற தமிழின அழிப்புநாள் கவனயீர்ப்பு!

வெள்ளி மே 20, 2022

மே 18 அன்று  பிற்பகல் 4 மணிக்கு ஒஸ்லோ மத்திய தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட தமிழின அழிப்பு நாள் கவனயீர்ப்பு போராட்டம் நோர்வே நாடாளுமன்ற திடலை சென்றடைந்தது.

 நாடாளுமன்ற திடலில் சிறீலாங்காவால் கொத்துக்கொத்தாக அழிக்கப்பட்ட எமது மக்களுக்கும் மாவீரர்களுக்கும் சுடர்வணக்கம் மலர்வணக்கம் அகவணக்கம் செலுத்தப்பட்டு நினைவுரைகள் நோர்வே அரசியல் கட்சிகளின் பிரமுகர்களாலும் இளையோர்களாலும் நிகழ்தப்பட்டன உரைகளை நிகழ்த்திய நோர்வே அரசியல் பிரமுகர்கள் தமிழீழத்தில் நடைபெற்றது இன அழிப்பு என்பதை முதல் முறையாக வெளிப்படையாக தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 நோர்வேயின் இன்னொரு மாநிலமான Stavanger நகரில் நடைபெற்ற தமிழின அழிப்பு நிகழ்வு நாள் கவனயீர்ப்புப்போராட்டம்