நோர்வேயின் சமாதான முயற்சிகள் வெற்றியளித்திருந்தால் .......

திங்கள் ஓகஸ்ட் 10, 2020

இலங்கையில் நோர்வேயின் சமாதான முயற்சிகள் வெற்றியளித்திருந்தால் பலஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் விசேட பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

 டுவிட்டர் பதிவொன்றிற்கு அளித்துள்ள பதிலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எரிக்சொல்ஹெய்ம் என்கின்ற இந்த நபர் முன்னர் விடுதலைப்புலிகளுக்கு பாரியவருமானத்தை வழங்குபவராகவும், ஊட்டச்சத்தினை வழங்குபவராகவும் பராமரிப்பாளராகவும் விளங்கியவர் தற்போது இவர் ஒரு சூழல் செயற்பாட்டாளர் என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அதற்கு பதில் அளித்துள்ள சொல்ஹெய்ம் இந்த நபர்சமாதானத்தை ஊக்குவிப்பதற்கான பாடுபட்டவர்,நாங்கள் இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகளிடமிருந்து கிடைத்த அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்பட்டோம் என தெரிவித்துள்ளார்.

நாங்கள் இந்தியாவுடனும் சமாதான முயற்சிகளை ஆதரி;த்த ஏனையவர்களுடனும் நெருக்கமாக இணைந்து செயற்பட்டோம் ,நாங்கள் வெற்றியடைந்திருந்தால் இலங்கையில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் எனவும் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.