நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கும் கரோனா வைரஸ்

திங்கள் ஏப்ரல் 13, 2020

சீனாவின் ஷாங்காயை சேர்ந்த புடான் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி லூ லூ, அமெரிக்காவின் நியூயார்க் ரத்த மையத்தை சேர்ந்த விஞ்ஞானி ஜாங் ஷிபோ ஆகியோர் இணைந்து வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:

மனித உடலின் 'டி-செல்கள்', அந்நிய வைரஸுக்கு எதிராக போர்வீரனை போன்று செயல்படுகின்றன. இந்த செல்கள் மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலமாகும்.

கரோனா வைரஸ் நமது உடலில்நுழையும்போது ஏமாற்று வித்தையை கடைப்பிடிக்கிறது. மனித உடல் செல்களின் ஓர் அங்கமாக நடித்து கரோனா வைரஸ் உடலில் நுழைந்து குறுகிய காலத்தில் பல்கி பெருகி விடுகிறது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகே டி செல்களால், கரோனா வைரஸை அடையாளம் காண முடிகிறது.

அதற்குள் கரோனா வைரஸ்,டி செல்களை பிணைக்கைதியாக பிடித்து அவற்றின் செயல்பாடுகளை முற்றிலுமாக முடக்கிவிடுகின்றன. அதாவது எச்ஐவி வைரஸ் போன்று உடலின் நோய்எதிர்ப்பு மண்டலத்தை கரோனா வைரஸ்தாக்கி அழிக்கிறது. எங்களது கண்டுபிடிப்பை உறுதி செய்ய தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.