நஷ்டத்துக்கு மங்களவே பொறுப்பு!

திங்கள் பெப்ரவரி 11, 2019

சுங்க திணைக்கள ஊழியர்கள் மேற்கொண்டிருந்த போராட்டத்தினால் திணைக்களத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்தை அமைச்சர் மங்கள சமரவீரவே பொறுப்பேற்க வேண்டும். அவரின் தன்னிச்சையான நடவடிக்கையே இதற்கு காரணமாகும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.