நடிகர் கமல் தோப்புக்கரணம் போட்டாலும்,பல்டி அடித்தாலும் ஒரு நாளும் ஆட்சிக்கு வர முடியாது!

சனி அக்டோபர் 05, 2019

சென்னையில், அவர் அளித்த பேட்டி: மாமல்லபுரத்தில் நடக்க உள்ள, பிரதமர்-சீன அதிபர் சந்திப்பு, சர்வதேச அளவில் கவனிக்கப்படுகிறது. அந்த நிகழ்ச்சிக்கு வருகிறவர்களை வரவேற்பது, தமிழர் பண்பாடு.

பிரதமர் மற்றும் சீன அதிபரை வரவேற்று, பேனர் அமைக்க உள்ளோம். சட்டத்தை மதித்து, நீதிமன்றத்தை அணுகி,அனுமதி பெற்றுள்ளோம்.பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல்,வரவேற்பு பேனர் அமைக்கப்படும்.

எங்களுக்கு பிரதான எதிரி தி.மு.க., தான். அவர்களுக்கு எதிராக, எங்கள் நகர்வு இருக்கும்.

சமூகத்திற்கு தேவையான அரசா, இல்லையா என்பதை, நடிகர் கமல் தீர்மானம் செய்ய முடியாது.மக்கள் தான் தீர்மானம் செய்ய வேண்டும். மக்கள் தீர்மானம் செய்ததால் தான்,தமிழகத்தில்,அ.தி.மு.க., ஆட்சி நடக்கிறது.

நடிகர் கமல், தோப்புக்கரணம் போட்டாலும், பல்டி அடித்தாலும், ஒரு நாளும் ஆட்சிக்கு வர முடியாது. அவரது சக்தியை, லோக்சபா தேர்தலில், மக்கள் உணர்த்தி விட்டனர்.

அவருக்கு வேறு வழியில்லை. அ.தி.மு.க., அரசை எதிர்த்தால் தான், அரசியல் செய்ய முடியும் என்பதால்,கருத்து கூறுகிறார்.

தமிழகத்தை பொறுத்தவரை, இரு மொழிக் கொள்கை கடைபிடிக்கப்படுகிறது. மூன்றாம் மொழியை, விரும்புவோர் கற்றுக் கொள்ளலாம்.

விருப்பம் உள்ளவர்கள், பகவத்கீதை படிப்பதில் தவறில்லை. இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.