ஓ.எம்.பி அலுவலகத்திற்கு தமிழ் அரசியல் வாதிகள் துணைநிற்க கூடாது!

வியாழன் ஓகஸ்ட் 22, 2019

யாழ்ப்பாணத்தில் எதிவரும் 24 ஆம் திகதி திறக்கப்படவுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிராந்திய அலுவலகத்திற்க்கு தமிழ் மக்களின் அரசியல் பிரதிதிநிதிகள் எவரும் துணைக்நிற்க கூடாது என கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி தெரிவித்துள்ளார்.

இன்று 22-08-2019 கிளிநொச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

 வலிந்து காணாமல்  ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஓ.எம்.பி அலுவலகத்தை நிராகரித்து எதிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் 24 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அதன் பிராந்திய அலுவலகம்  திறக்கப்படுவது எமக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. 

அத்தோடு ஓ.எம்.பி அலுவலகம் திறப்புக்கு தமிழ் அரசியல்வாதிகள் எவராவது சென்றால்   முதலில் அவர்கள் எங்களது உறவுகளுக்கு பதிலை வழங்கிவிட்டு செல்லுங்கள் என நாம் அவர்களிடம் கோருகின்றோம் எனத் தெரிவித்த  கோகிலவாணி.

 இம்மாதம் 30 ஆம் திகதி வவுனியா ஓமந்தையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் வடக்கு தழுவிய ரீதியில் மாபெரும் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளளோம், இறுதி யுத்தக் காலத்தில்  பெருமளவான உறவுகள் ஓமந்தை பகுதியிலேயே கையளிக்கப்பட்டனர். 

இந்த இடத்திலேயே  வடக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் கிழக்கில் அம்பாறையிலும் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம். எனவே இந்தப் போராட்டத்தில் அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைவரையும் கலந்து ஆதரவு தருமாறு கோருவதாக அவர் தெரிவித்தார்.