ஓங்கி வளர்ந்திடும் ஞாபகம் திலீபன்

திங்கள் செப்டம்பர் 28, 2020

பனைமர இடைவெளிச் சூரியன் திலீபன் 
பால்நிலா பொழியொளி இரவும் திலீபன்
 ஆழ்கடல் அமைதியின் நீர்முகம் திலீபன் 
ஆடிடும் கொடியசை காற்றும் திலீபன்
 ஏழ்கடல் வைத்த எம் மகன் திலீபன்
 ஏரி நீர் நில ஈரமும் திலீபன்.
 ஒருவரும் மறவாத் திருமகன் திலீபன் 
ஓர் ஆயிரம் கோடிக் காலத்தின் பின்னும் 
ஓங்கி வளர்ந்திடும் ஞாபகம் திலீபன்
 செவ்வரத்தம் பூமுகம் திலீபன்
 செண்பகக் கண்களின் சிவப்பும் திலீபன்
 நாளையும் நாளையும் 
நாளையின் நாளையும்

நம் இனம் நாளையும

- தீபிகா