ஒன்பது நோயாளிகளுக்கு ஒரு வெண்டிலேட்டர்- கனடா

ஞாயிறு மார்ச் 22, 2020

கொரோனா பரவுவதால் பல நாடுகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வெண்டிலேட்டர் என்ற கருவிக்கு தட்டுப்பாடு உள்ளது.

இந்த நேரத்தில் கனடாவைச் சேர்ந்த ஒரு மருத்துவர், ஒரு வெண்டிலேட்டரை ஒன்பது நோயாளிகளுக்கு பயன்படுத்தும் வகையில் கண்டுபிடிப்பு ஒன்றை செய்துள்ள விடயம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஒன்ராறியோ மருத்துவரான Dr Alain Gauthier, வெண்டிலேட்டர் ஒன்றை பிரித்து, அதில் சில மாற்றங்களை செய்து, ஒரேவெண்டிலேட்டரை ஒன்பது நோயாளிகளுக்கு பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைத்துள்ளார்.

2006ஆம் ஆண்டு, Detroit மருத்துவர்கள் இருவர் இதேபோன்ற ஒரு மாற்றத்தைச் செய்திருந்தனர்.அந்த வீடியோவை யூடியூபில் பார்த்துத்தான் இந்த புதிய கண்டுபிடிப்பை உருவாக்கினாராம் Gauthier.

அவரது கண்டுபிடிப்பைக் குறித்து புகைப்படங்களுடன் தகவல்களை பதிவேற்றம் செய்துள்ள அவரது சகாக்கள், Gauthierஐ வேடிக்கையாக ‘evil genius’ என்று அழைக்கிறார்களாம்.அந்த ட்வீட் 63,000 முறை லைக் செய்யப்பட்டதோடு, டெஸ்லா உரிமையாளர் எலன் மஸ்க் உட்பட பலரும் Gauthierஐ பாராட்டியுள்ளார்கள்.