ஒன்ராறியோவில் அம்பின் மூலம் ஒருவர் கொலை.!

சனி பெப்ரவரி 09, 2019

ஒன்ராறியோ – லண்டன் பகுதியில் ஆண் ஒருவர் அம்பு எய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் தாக்கப்பட்ட நபர் காயத்துடனேயே அதிகாலை ஒரு மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார். எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதல் முயற்சியானது கொலை முயற்சி என்றும் பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அத்துடன் உயிரிழந்தவர் லண்டனைச் சேர்ந்த 46 வயதான பிரைன் மக்சௌண்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், இது தொடர்பில் தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸ் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறிப்பாக கடந்த 3 ஆம் திகதிக்கும் 5 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட நாட்களில் நபரை சந்தித்தவர்கள், தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.