ஓபிஎஸ், ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட மத்திய பாதுகாப்பு படை நீக்கம்!

வியாழன் சனவரி 09, 2020

தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த மத்திய பாதுகாப்பு படை மீளப்  பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு மத்திய அரசின் பாதுகாப்பு படை வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த மத்திய பாதுகாப்பு படை மீளப்  பெறப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக, இதற்கு இணையான தமிழக காவல் துறை பாதுகாப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.