ஒப்ரேசன் சாணக்கியா 2.0: திரைவிலகும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை – 2 - கலாநிதி சேரமான்

திங்கள் மே 25, 2020

இந்தியாவின் மகாபாரதக் கனவும், இலவு காக்கும் தமிழ்க் கிளிகளும்

இத் தொடர் வெளியிடப்படுவதையிட்டு நேரடியாகவும், மறைமுகமாகவும் சில தரப்புக்களால் கண்டனங்களும், விமர்சனங்களும், அதிருப்திகளும் தெரிவிக்கப்பட்டிருந்தன. இவ்வாறான கட்டுரைகளை வெளியிடுவது இந்தியாவைப் பகைத்துக் கொள்ளும் செய்கை என்று ஒரு தரப்பினரும், இந்தியாவின் ஆதரவு இன்றி தமிழீழத்தை அமைக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ளாததன் வெளிப்பாடாகவே இவ்வாறான கட்டுரைகள் வெளிவருகின்றன என்று இன்னொரு தரப்பினரும், தனது கடைசி மாவீரர் நாள் உரையில் இந்தியாவிற்குத் தமிழீழத் தேசியத் தலைவர் நேசக்கரம் நீட்டியிருந்த நிலையில், தேசியத் தலைவரின் வெளியுறவுக் கொள்கைக்கு விரோதமான முறையில் இக்கட்டுரை வெளிவருவதாக மற்றுமொரு மேதாவிகளைக் கொண்ட அணியும் கருத்துக்களைப் பதிவு செய்திருந்தன.

ஒப்ரேசன் சாணக்கியா – 2.0 நடவடிக்கையின் முழுப் பரிமாணங்களையும் நாம் பார்ப்பதற்கு முன்னர், மேற்குறிப்பிட்ட எதிர்வினைகளுக்கான பிரதிபலிப்பை இவ்வாரத் தொடரில் பதிவு செய்வது அவசியமாகின்றது.

மேலும்...