ஒரே நாளில் கிடைத்த 163 கோடி!!!

ஞாயிறு மே 17, 2020

இந்தியா–தமிழகத்தில் நேற்று (16) திறக்கப்பட்ட மதுபானசாலைகள் மூலம் 163 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஊரடங்கு அமுலில் இருந்த நிலையில் மே-7ம் திகதி திறக்கப்பட்ட மதுபானசாலைகளை மே-9ம் திகதி முதல் மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் அதற்கு எதிராக தமிழக அரச உச்ச நீதிமன்றை நாடிய நிலையில் மதுபானசாலைகளை திறக்க உத்தரவிடப்பட்டது.இதன்படி நேற்று மதுபானசாலைகளை திறந்த போது மேற்குறிப்பிட்ட கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளனர்.