ஒரு ஜனாதிபதிக்கு வரவு செலவு திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கீடு அவசியமா?

வியாழன் மார்ச் 14, 2019

ஊழல் குற்றவாளிகளை காப்பாற்றும், அரசியல் அமைப்பினை மீறும், நீதிமன்றத்தை அவமதிக்கும்,  தனது  அமைச்சுக்கள் தொடர்பிலான விவாதத்தில் கூட கலந்துகொள்ளாது ஒரு ஜனாதிபதிக்கு வரவு செலவு திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கீடு அவசியமா என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக சபையில் கேள்வி எழுப்பினார்.  

நாடாளுமன்றத்தில் நேற்று(13) இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகங்கள் மீதான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.