ஒரு லட்சம் பேருக்கு காணி வழங்கும்

சனி நவம்பர் 28, 2020

ஒரு லட்சம் பேருக்கு காணி வழங்கும் அரசின் திட்டத்துக்கு யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

நேற்று அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
ஒரு லட்சம் பேருக்கு காணி வழங்கும் திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அதற்கு அமைவாக மக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

இதன் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பிரதேச செயலர் பிரிவு ரதியாக இதற்கான விண்ணப்பங்கள் மக்களிட மிருந்து பெறறப்பட்டிருக்கின்றன. இதில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.

குறிப்பாக நல்லூர், சாவகச்சேரி, கோப்பாய் ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் இருந்து அதிகளவான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன எனவும் அவர் மேலும் கூறினார்.