ஒஷத சேனநாயக்க பணிப்பாளர் கடமையை பெறுப்பேற்றார்!

வியாழன் நவம்பர் 21, 2019

இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட ஒஷத சேனநாயக்க இன்றைய தினம் பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார். 

அசர் இன்றையதினம் கடமைகளை ஏற்றுக்கொண்டதும், 'ஸ்மார்ட் ஸ்ரீ' என்னும் திட்டத்தை செயல்படுத்த நாட்டில் 5 ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

தொழில்நுட்பத்தில் முன்னேறாமல் நாடு ஏனைய நாடுகளுடன் முன்னேற முடியாது என்பதை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ புரிந்து கொண்டுள்ளார் என்றார்.

அதன்படி, புதிய தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தனது இலக்குகளை அடைவதில் சிறிலங்கா  ஜனாதிபதியை ஆதரிக்க அனைத்து நபர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.