ஒடிசா கடற்கரையில் அய்யன் திருவள்ளுவர் மணல் சிற்பம்!

வெள்ளி சனவரி 15, 2021

நாடு கடந்து வாழும் தமிழ்ரகளால் ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டுவருகிறது

உலகப் பொதுமறையாம் திருக்குறளைக் கொடுத்த திருவள்ளுவரை தமிழ்ச் சமூகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் கொண்டாடிவருகிறது. திருக்குறள் 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அவருடைய ட்விட்டர் பதிவில், ‘போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், ஒடிசாவைச் சேர்ந்த புகழ்பெற்ற மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் திருவள்ளுவரின் உருவத்தை மணற்சிற்பமாக உருவாக்கியுள்ளார். அந்த மணற்சிற்பத்தை பலரும் கண்டு ரசித்துவருகின்றனர். கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் சுதர்சன் பட்நாயக் மணற்சிற்பம் உருவாக்கியுள்ளார். இது தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன.