ஒட்டுக்குழு டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆதரவுப் பிரசார கூட்டம்!

திங்கள் அக்டோபர் 14, 2019

சிறீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆதரவுப் பிரசார கூட்டம் இன்று (14) நடைபெறவுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று இருவேறு பிரதேசங்களில் பிரசார கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்த இரண்டு கூட்டங்களிலும், நாமல் ராஜபக்ச கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

முதலாவது ஆதரவு பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணம் நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் இன்றையதினம் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.

இரண்டாவது பிரசாரக் கூட்டம் பருத்தித்துறை சூரியமஹால் மண்டபத்தில் இன்று பிற்பகல் 6 மணிக்கு நடைபெறவுள்ளது.இதனிடையே காங்கேசன்துறை வீதி, கோண்டாவில் மேற்கு உப்புமடச்சந்தி வேதபாராயண சனசமூக நிலையத்திலும் பிற்பகல் 4.30 மணிக்கு மற்றுமொரு ஆதரவு பிரசார கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாளையதினம் திண்ணை விருந்தினர் விடுதியில், நாமல் ராஜபக்சவின் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.