ஒட்டுமொத்த மனித குலமே மண்டியிட்டு நிற்கிறது - Dr சங்கர்

சனி மார்ச் 28, 2020

வைரசுக்கு எதிரான போராட்டத்தை நாடு எதிர் நோக்கியிருக்கிறது. தமக்கு முன்னால் தோன்றுகிற எதிரிகளை வென்று, மார்த்தட்டியிருக்கிறது இந்த உலகம். கண்ணுக்கு தெரியாத கிருமியின் தாக்குதலுக்கு முன், ஒட்டுமொத்த மனித குலமே மண்டியிட்டு நிற்கிறது, இது போன்ற வைரஸ்கள் மனித குலத்தை தாக்கியது இது முதற் தடவை அல்ல.

கடந்த நூற்றாண்டுகளில் ஐரோப்பாவை கொடிய நோய்கள் தாக்கி இருக்கின்றன.ஆசியாவையும் ஆப்பிரிக்காவையும் தாக்கி இருக்கின்றன.

அவையெல்லாம் அந்தந்த கண்டங்களை சார்ந்த மக்களுக்கான பேரிடர்களாக மட்டுமே பார்க்கப்பட்டன. மனித நாகரீகத்தின் கண்டுபிடிப்புக்கள் அதன் மகத்தான சாதனைகள் அனைத்தையும் ஒரு வைரஸ் கேள்விக்குள்ளாக்குகிறது. கொரோனோ வைரஸ் கொண்டு வந்திருக்கும் பீதி உலகப் பொதுவானது என்றாலும் இந்தியாவை பொறுத்தவரை கடந்த 70 ஆண்டுகளில் எதிர் நோக்கிருக்கும் மிகப் பெரிய சவால் இது. கட்சி, கொள்கை,கோட்பாடு இவைகளை கடந்து, விமர்சனங்களை தவிர்த்து, ஒற்றுமையாய் ஒரு கிருமிக்கு எதிரான ஒரு போராட்டத்தை எதிர்க்கொள்ளவேண்டிய தருணம் இது. செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் அப்படியாக தான் இருக்கின்றன.

மனித இனத்தின் இருட்டு பக்கத்தை வெளிச்சமிட்டு ஒளியூட்ட, தேச எல்லைகள் தாண்டி உலகில் எங்கு வேண்டுமானாலும் மனிதம் நிறைந்தவர்கள் தென்படுவார்கள் !
கிழக்கு பின் தொடரும் என்கிற இன்குலாப்பின் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.

மனிதனுக்குள் இருக்கும் மனிதம் அழிவதில்லை. படைப்பின் நோக்கம்
செயலில் தெரியும் என்பதை உலகில் பேரிடர் நிகழும் போது
மனிதன் கூடுதலாக நிரூபித்து கொண்டிருக்கிறான். நீங்களும் நானும், நாளும் நேரடியாக கண்டுகொண்டுதானிருக்கிறோம்.

This is a wake up call for the entire world to prioritise what is important in life; family, love and health. சுமூகமான நாளுக்காக பிரார்த்திப்போம்.
இங்கிலாந்திலிருந்து
Dr சங்கர்