பாகிஸ்தான் பிரதமர் இன்று சிறிலங்கா விஜயம்

செவ்வாய் பெப்ரவரி 23, 2021

 பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இரண்டு நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று சிறிலங்கா வருகிறார்.

 சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில், அவரின் சிறிலங்கா விஜயம் அமையவுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்த ஆண்டிற்கான தமது முதலாவது வெளிநாட்டு உத்தியோக பூர்வ விஜயத் தில்,  சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும்   சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புக் களில் பங்கேற்க உள்ளார்.