பாரிஸ் நகரில் நோட்ரே டேம் கேதட்ரல் தேவாலயத்தில் தீ விபத்து

திங்கள் ஏப்ரல் 15, 2019

பிரான்ஸ் பாரிஸ் நகரில் உள்ள 850 வருடங்கள் பழைமையான கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது. 

நோட்ரே டேம் கேதட்ரல் என்ற மேற்படி தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இன்று மாலை 5.30 மணி அளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் நகரம் முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயணைப்புப்படையினர் தீயை அணைக்க தொடர்ந்து போராடி வருகின்றனர் எனவும் தெரியவருகின்றது. 

உலகிலேயே ஐரோப்பிய கட்டிட கலையை பறைசாற்றும் வகையில், அதற்கு உதாரணமாகத் திகழ்ந்த இந்த பழமையான தேவாலயத்தில் தீவிபத்து ஏற்பட்டது பாரிஸ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 
இந்த தீ விபத்துக்கான காரணம் இது வரை வெளிவரவில்லை. எனினும், தேவாலயக் கோபுரத்தில் புனரமைப்புப் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன எனவும் தெரியவருகின்றது.