பாரிஸ் படுகொலையில் சாவடைந்தவர்களுக்கு அஞ்சலி!!

புதன் அக்டோபர் 07, 2020

கடந்த சனிக்கிழமை (03/10/2020)அன்று நடந்த துயர சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்துவதற்கான கண்ணீர் வணக்க நிகழ்வு நுவாசி லு செக் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில், நுவாசி லு செக் மாநகர சபை (Maire) École Bayard, École Quatremaire, collège René casson, Fédération de Basket ball ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09/10/2020) அன்று மாலை 19h மணிக்கு நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக, மேலும் விருப்பம் உள்ளவர்கள் பூங்கொத்துக்கள், படங்கள், உங்கள் மனக்குமுறல்களை எழுத்து வடிவில் எழுதுதல் என்பன அனுமதிக்கப்படும்.

** அனைவரும் முக கவசம்( மாஸ்க்) அணிதல் கட்டாயம்.

பிரான்சு அரசாங்கத்தால் கூறப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும்.

நிகழ்வு
வெள்ளிக்கிழமை 09/10/2020 மாலை 19h-22h
Primaire Henry Quatre Marie, 16 rue baudin 93130 Noisy-le-Sec

நன்றி.
தமிழ்ச்சங்கம்
நுவாசி லு செக்

தொடர்புக்கும்,
0695670779