பாரிஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  2000க்கும் மேற்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்கள்!

திங்கள் ஜூலை 06, 2020

 உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர்களின் நடைபயண நிகழ்ச்சிக்கு  அந் நாட்டு அரசு அனுமதி மறுத்ததால்  குறித்த நடைபயணம் நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது,

 இந்நிலையில் இந் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக கடந்த சனிக்கிழமை 2000க்கும்  மேற்பட்ட  ஓரினச்சேர்க்கையாளர் பாரிஸில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வன்முறைச் சம்பவங்கள் ஏதுமின்றி தங்களது கோரிக்கைகளையும், கோபத்தினையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர்.

 2020ஆம் ஆண்டு ஓரினச்சேர்க்கையாளர்களின்  50ஆவது ஆண்டுக் கொண்டாட்ட நிகழ்வு இடம்பெறவிருந்த நிலையில்  இம்முறை  பல நாடுகளில் கொரோனா வைரஸ் காரணமாக இந் நிகழ்வுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.