பாரஊர்தி சரிந்து வீழ்ந்ததால் இருவர் காயம்!!

புதன் ஏப்ரல் 07, 2021

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் குடாகம பகுதியில் தொலைபேசி இணைப்பிற்கான கேபில்கள் ( கம்பி) ஏற்றிச்சென்ற கனரக லொறியிலிருந்து சரிந்து வீழ்ந்த ஒருத்தொகுதி கேபில்களால் இருவர் சிறு காயமடைந்துள்ளனர்.

ஹட்டன் காவல்துறை பிரிவிற்குட்பட்ட குடாகம பகுதியிலே இன்று (07) மதியம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.அதிக வேகமாக சென்ற குறித்த கனரக லொறி வளைவொன்றில் செல்கையிலே கேபில்கள் ஒருத்தொகுதி சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளன.இதன் போது பாதசாரதிகள் இருவர் சிறு காயமுற்றதுடன் போக்குவரத்து தடையும் சில மணி நேரம் ஏற்பட்டது.