பார்வை இல்லாதவரை வயலின் வாசிக்க வைக்கும் மேஜிக் கோல்!

திங்கள் செப்டம்பர் 02, 2019

தென் கொரியாவைச் சேர்ந்த குயிங்கோ ஜியோன், கலை நுணுக்கம் மிகுந்த ஒரு சிறுவன்.குழந்தைப்பருவத்தில் இருந்தே ஓர் இசைக்குழுவில் வயலின் இசைக் கலைஞனாக பணியாற்ற வேண்டும் என்பது அவனது கனவு.

ஆனால்,குயிங்கோவிற்கு கண்பார்வை இல்லை!அதனால் மியூசிக் கண்டக்டர் வழி நடத்துவதைப் பார்த்து குயிங்கோவால் இசைக்க முடியாது.

மகனின் கனவை அறிந்த தந்தை ஒரு மேஜிக் கோலை உருவாக்கியிருக்கிறார்.அந்தக் கோலை கையில் பிடித்து அசைத்தால் போதும்.அதிலுள்ள அதிர்வுகள் மூலம் மியூசிக் கண்டக்டர் என்ன சொல்ல வருகிறார் என்பதை குயிங்கோவால் புரிந்துகொள்ள முடியும்.

கண்டக்டரின் வழி நடத்தலைத் துல்லியமாக உணர்ந்துகொண்டு இசையை மீட்ட முடியும். இப்போது குயிங்கோ தென் கொரியாவில் புகழ்பெற்ற ஓர் இசைக்குழுவில் வயலினை இசைத்துக் கொண்டிருக்கிறார்!