பாதாளக்குழு உறுப்பினர்கள் நால்வர் கைது

வியாழன் ஓகஸ்ட் 13, 2020

பாதாளக்குழுவைச் சேர்ந்த நால்வர்,  வந்துராமுல்ல வனப் பிரதேசத்திலுள்ள பாழடைந்த வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இவர்களிடமிருந்து கைக்குண்டுகள், கூரான ஆயுதங்கள், ​போதைப்பொருள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதென, நவகமுவ   காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாள்களாக நவகமுவ- காவல் துறையினர்  பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், கப்பம் பெறும் நடவடிக்கைகள் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.