பாடசாலை சீருடைக்கான வவுச்சர் விநியோகத்தில் முறைகேடு

புதன் ஜூன் 12, 2019

பாடசாலை சீருடைகளைப் பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர்களை விநியோகிக்கும் செயற்றிட்டத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் குறித்த விசாரணைகளுக்காக ஊழல் ஆணைக்குழு வசமிருந்த இரு கோப்புக்களை, கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கையளிக்குமாறு ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

அரச சட்டத்தரணியின் கோரிக்கைக்கு இணங்க, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடமுள்ள கோப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க, குறித்த கோப்புக்களுடன் எதிர்வரும் 28ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.