பாடசாலைகள் 2 ஆம் கட்டத்தின் கீழ் இன்று மீண்டும் ஆரம்பம்

திங்கள் ஜூலை 06, 2020

கொரோனா வைரஸ் (கொவிட் 19) அச்சுறுத்தலால் மூடப்பட்டிருந்த சகல அரச பாடசாலைகளும் 2 ஆம் கட்டத்தின் கீழ் இன்று (06) மீண்டும் கல்வி செயற்பாடுகளுக்காக ஆரம்பிக்கப்படுகின்றன.

இதன் அடிப்படையில் 13 ஆம், 11 ஆம் மற்றும் தரம் 5 மாணவர்களே பாடசாலைக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

13 ஆம், 11 ஆம் தர மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் இன்று முதல் காலை 7.30 க்கு ஆரம்பமாகி மாலை 3.30 வரை முன்னெடுக்கப்படுகின்றது.

5 ஆம் தர மாணவர்களுக்காக காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை கற்பித்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் திகதி முதல் தரம் 12 மற்றும் 10 மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 3, 4, 6, 7, 8 மற்றும் 9 ஆம் தர மாணவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி பாடசாலைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இறுதி கட்டமாக எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி தரம் 1, 2 மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கவுள்ளன.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றியே இவ்வாறு மாணவர்கள் கட்டம் கட்டமாக பாடசாலைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.