பாடசாலைகளில் டெங்கு ஒழிக்க நடவடிக்கை!!

சனி நவம்பர் 21, 2020

மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.அதன்படி அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு திட்டங்களை முன்னெடுக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது.

மேலும், பாடசாலைகளில் நுளம்பு ஒழிப்பு பிரசாரங்களுக்கு உதவுமாறு அந்தந்த சுகாதார அலுவலர்களுக்கு சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் தரம் 6 முதல் 13 வரை, மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.