பாட்டி வைத்தியம் எனும் பொக்கி‌ஷம்!!

செவ்வாய் மார்ச் 05, 2019

சளி, இருமல் இருந்தால் முன்பெல்லாம் வீட்டு வைத்தியமும், பாட்டி குறிப்பும் கை கொடுக்கும். இன்று டாக்டரிடம் ஓடுகிறோம்.

வீட்டு வைத்திய முறை மீட்கப்பட வேண்டும். பாரம்பரிய உணவுப் பழக்கத்துக்கு மாறவேண்டும்.

இந்திய மருத்துவத்துறையானது சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியது.

நம் மருத்துவ முறை 2000 ஆண்டுகள் தொன்மையானது.


தற்போது, ஒரே மருத்துவ வளாகத்தில், பல பிரிவுகளை உள்ளடக்கிய மருத்துவர்கள் பலர் பணிபுரிந்தபோதும் ஒருவருக்கொருவர் பெயர் தெரியாத நிலை உள்ளது. அரசு மருத்துவர்களிடம் நோயாளிகள் வரும்போது, தங்களிடம் இல்லாத வைத்திய முறை அருகில் உள்ள வேறு பிரிவில் அதற்கு சிகிச்சை அளிக்க முடியும் என நம்பினால் தயங்காது பரிந்துரைத்து அனுப்ப வேண்டும்.

பாரம்பரியத்தோடு,விஞ்ஞானமும் சேர்ந்தால் வெற்றி நிச்சயம்.

வெளிநாட்டு குப்பை உணவை தவிர்த்தால், தொப்பையில்லாத வாழ்க்கை வாழலாம். பாரம்பரிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சித்த மருத்துவம் பாரம்பரிய முறைப்படி வாழவே பரிந்துரைக்கிறது.

வீட்டு வைத்திய முறை மீட்கப்பட வேண்டும். அது காலத்தால் அழிக்க முடியாத பொக்கி‌ஷம். சித்த மருத்துவம் நாள்பட்ட நோய்களையும் தீர்க்கும். நோய்களுக்கு நல்ல பலனும் அளிக்கும்.

இடுப்பு வலி, கழுத்து வலி, மூட்டு வலி, கொழுப்பு குறைப்பு ஆகியவற்றுக்கு ஆயுர்வேத மருத்துவம் நல்ல பலனை அளிக்கும். உடல், மனத் தன்மையை, ‘பிரகிர்தி‘ என ஆயுர்வேதம் சொல்லுகிறது.

ஆயுர்வேதம் அடிப்படையான அறிவு. இது குறித்த சித்தாந்தம் புரிந்துவிட்டால், நோய் வரும் முன்பே தடுத்து விடலாம்.

தமிழகத்தில் கொசுக்கள் மூலம் பரவிய டெங்கு காய்ச்சலுக்கு ஆங்கில மருத்துவ முறை கையை விரித்த நேரத்தில்,பாரம்பரிய மருத்துவர்கள் வீதியெங்கும் அரசு சார்பில் நிலவேம்பு கசாயம் இலவசமாக வினியோகம் செய்து, டெங்கு காய்ச்சலைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கால்நடைகளை வாட்டி வதைத்த கோமாரி நோய்க்கும்கூட மூலிகை மருந்துகளே ஆறுதலாய் அமைந்தன.