பாட்டலிக்கு எதிராக குற்றப்பத்திரம் வாசிப்பு

வியாழன் மார்ச் 04, 2021

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மீதான குற்றப்பத்திரம் வாசிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே முன்னிலையில் இன்று(04) இந்த குற்றப்பத்திரம் வாசிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிக்குற்றச்சாட்டு தொடர்பில் அடிப்படை எதிர்ப்பினை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக சம்பிக்க ரணவக்க  சார்ப்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அடிப்படை எதிர்ப்பினை ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துள்ளகொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.