பாதுகாப்புப் பிரிவை முற்றாக சீரமைக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

புதன் ஏப்ரல் 24, 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு 9 மணியளவில் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றினார்.

இதன்போது, நாட்டின் பாதுகாப்புப் பிரிவை முற்றாக சீரமைக்கவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அடுத்த 24 மணித்தியாலங்களில் பாதுகாப்பு தரப்புகளின் தலைவர்களில் மாற்றங்களை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

கிடைத்த தகவல்கள் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் ஏதேனுமொரு வகையில் தமக்கு தெரியப்படுத்தவில்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.

தாக்குதல் தொடர்பான தகவல்கள் தமக்குக் கிடைத்திருந்தால் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும் எனவும் ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக்காட்டினார்.