பாவிக்க முடியாத மோட்டர் குண்டு மீட்பு!!

ஞாயிறு மே 31, 2020

மட்டக்களப்பு- வாழைச்சேனை பிரதேசத்தில் பாவனைக்கு பயன்படுத்த முடியாத நிலையில் கைவிடப்பட்டிருந்த மோட்டார் குண்டு ஒன்று இன்று (31) மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை குறிஞ்சிமலை வீதியில் மண் கொண்டு வந்து குவிக்கப்படும் மண்யாட் பகுதியிலே குறித்த மோட்டார் குண்டு ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து குறித்த பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரும் குறித்த இடத்துக்குச் சென்று பாவிக்க முடியாத மோட்டர் குண்டை மீட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.