போராட்டத்துக்கு தயராகும் மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

திங்கள் செப்டம்பர் 16, 2019

சுகாதாரத் துறையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திசெய்து  தருமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த போதிலும் அரசாங்கம் உறுதியான எந்த  நடவடிக்கையையும் இது வரையில்  மேற்கொள்ளவில்லை. 

எனவே இந்த குறைபாடுகளுக்கான தகுந்த தீர்வை பெற்றுத்தர  தவறும் பட்டசத்தில் ஏனைய தொழிற் சங்கங்களையும் ஒன்றிணைத்த  வகையிலான பரந்து பட்ட தொழில் சங்க  நடவடிக்கைகயை  மேற்கொள்ள மத்திய செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானம்  எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள்  தெரிவித்துள்ளது.   

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு  உரையாற்றும்போதே அச் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே மேற்கண்டவாறு கூறினார்.