பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்!

புதன் செப்டம்பர் 18, 2019

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவீனம் காரணமாக சாவடைந்துள்ளார்.

சுகவீனமடைந்திருந்த தனம் நேற்று திங்கட்கிழமை (16-09-2019) இரவு 10.40 மணியளவில் சாவடைந்துள்ளார்.

இவர் யாழ்ப்பாணம் கொழும்புத்துறையை பிறப்பிடமாகவும், பெல்ஜியம் நாட்டின் அன்ற்வேப்பன் பகுதியை வதிவிடமாகவும் கொண்டவர்.

சிங்கள தேசம்

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு 21.09.2019 சனிக்கிழமை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை crematorium Antwerpen Jules Moretuslei 2, 2610 Antwerpen எனும் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அவரின் இறுதிக்கிரியைகள் 24.09.2019 செவ்வாய்க் கிழமை காலை 09 மணி முதல் 12.30 மணி வரை அதே மண்டபத்தில் இடம் பெற்று தகனமும் செய்யப்படவுள்ளது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு அன்னாரின் இறுதி நிகழ்விலே கலந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
பெல்ஜியம் கிளை