பேரி­ன­வா­தத்தின் கோர­முகம்

ஞாயிறு ஜூன் 09, 2019

2005ஆம் ஆண்டு விடு­த­லைப் ­பு­லி­க­ளுக்கு எதி­ரான முழு அள­வி­லான போருக்கு, பௌத்த பிக்­கு­களால் எவ்­வாறு தூப­மி­டப்­பட்­டதோ, இப்­போது, முஸ்­லிம்­களின் அர­சி­ய­லுக்கு எதி­ரான முழு­அ­ள­வி­லான போருக்கும், அதே பௌத்த பிக்­கு­களால் போர் தொடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

தலதா மாளி­கைக்கு எதிரே இருந்த புல் தரையில் கடந்த 31ஆம் திகதி, அத்­து­ர­லியே ரத்ன தேரர் ஆரம்­பித்த உண்­ணா­வி­ரதப் போராட்டம், அதற்குப் போடப்­பட்ட பிள்­ளையார் சுழி தான்.

அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன், மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்­புல்லாஹ் ஆகி­யோரைப் பத­வியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி, அவர் ஆரம்­பித்த இந்தப் போராட்டம், நான்­கா­வது நாள் நாடெங்கும் சூடு­பி­டித்­தது.

அவ­ருக்கு ஆத­ர­வாக கண்­டி­யிலும், நாட்டின் பிற பகு­தி­க­ளிலும், போராட்­டங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. உண்­ணா­வி­ரதப் போராட்­டங்­களும் நடத்­தப்­பட்­டன. இந்தப் போராட்­டங்கள், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­யாக வெடிக்கக் கூடிய ஆபத்து எழுந்த நிலையில், இரண்டு மாகாண ஆளு­நர்­களும் பதவி வில­கினர்.

அது­மாத்­தி­ர­மன்றி, கட்சி வேறு­பாடுகளின்றி அனைத்து முஸ்லிம் அமைச்­சர்­களும், பத­வி­களை விட்டு வில­கினர். தமது திட்டம் பலித்து விட்ட வெற்­றி­யோடு, அத்­து­ர­லியே ரத்ன தேரர் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை முடித்­துக்­கொண்டார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்குப் பின்னர், நாட்டின் நிலைமை மிக­மோ­ச­மான நிலையை எட்­டி­யி­ருக்­கி­றது என்­ப­தற்கு இதுவும் ஒரு எடுத்­துக்­காட்­டான சம்­ப­வ­மாக உள்­ளது.

அனைத்து முஸ்லிம் அமைச்­சர்­களும் பத­வி­களில் இருந்து வில­கிய  பின்னர், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் எம்.ஏ.சுமந்­திரன் தனது டுவிட்டர் பக்­கத்தில், “நேற்று நாங்கள், இன்று நீங்கள், நாளை இன்­னொரு “மற்­றவர்” என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

அவர் நேற்று நாங்கள் என்று குறிப்­பிட்­டது, தமி­ழரை, இன்று நீங்கள் என்று குறிப்­பிட்­டது முஸ்­லிம்­களை.

கடந்த காலங்­களில் தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம் எவ்­வாறு நடந்து கொண்­டதோ, அதே­வி­த­மாக இப்­போது முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நடந்து கொள்­கி­றது. நாளை இன்­னொ­ரு­வ­ருக்கு எதி­ரா­கவும் இது­போன்றே நடந்து கொள்ளும் என்­ப­தையே அவர் அவ்­வாறு குறிப்­பிட்­டி­ருந்தார்.

முஸ்லிம் அமைச்­சர்கள் இன­வா­தத்­திற்கு இரை­யாகி விட்­டனர் என்று அவர் வருத்­தத்தைப் பகிர்ந்து கொண்டார்.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வெறுப்பு அர­சி­யலை- அச்­சு­றுத்தும் போக்­கு­டனும், ஆவே­சத்­து­டனும் சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம் முன்­னெ­டுக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் மாறி மாறி ஆட்­சிக்கு வந்த எல்லா அர­சாங்­கங்­க­ளி­லுமே, அங்கம் வகித்து வந்த முஸ்­லிம்கள், இப்­போது, முதல்­ மு­றை­யாக ஒரு அர­சாங்­கத்தில் இல்­லாத வர­லாறு பதிவு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்­த­நி­லை­மைக்குக் காரணம் சிங்­கள பௌத்த பேரி­ன­வாத வெறியே அன்றி வேறில்லை. முஸ்­லிம்­களின் அர­சி­யலை சூனி­ய­மாக்கும் சதித் திட்­டத்தை நகர்த்தி அதனை வெற்­றி­க­ர­மாகச் சாதித்­தி­ருக்­கி­றார்கள் அவர்கள்.

2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்கு வந்த பின்னர், விடு­தலைப் புலி­க­ளுக்கும், அர­சாங்­கத்­துக்கும் இடை­யி­லான பேச்­சுக்கள் தோல்­வியை நோக்கி நகரத் தொடங்­கி­யி­ருந்­தன.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்கம் புலி­க­ளுடன் நடத்­திய பேச்­சுக்­களை எதிர்த்துப் போராட்­டங்­களை நடத்தி, மஹிந்த ராஜபக் ஷவை வெற்­றி­பெற வைப்­பதில் அப்­போது, பௌத்த பிக்­கு­களால் வழி நடத்­தப்­பட்ட ஜாதிக ஹெல உறு­ம­யவும், ஜே.வி.பி.யும், முக்­கிய பங்­காற்­றி­யி­ருந்­தன.

2006ஆம் ஆண்டு திரு­கோ­ண­மலை மாவி­லாறில் அணைக்­க­தவு மூடப்­பட்­டதை, சாட்­டாக வைத்­துக்­கொண்டு அதனை போராக வெடிக்கச் செய்­வ­தற்கு, ஜாதிக ஹெல உறு­மய பிக்­குகள் தான் கார­ண­மாக இருந்­தனர்.

மாவி­லாறு அணை தற்­செ­ய­லா­கவே மூடப்­பட்­டது. அந்த அணைக்­க­தவு மூடப்­பட்ட பின்­னரே, அது முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒன்­றா­கவும், இரண்டு தரப்­பு­க­ளுக்கும் இடை­யி­லான கௌரவப் பிரச்­சி­னை­யா­கவும் மாறி­யது.

அந்தச் சூழலில் ஜனா­தி­ப­தி­யாக இருந்த மஹிந்த ராஜபக் ஷ, புலிகள் மீது போரை நடத்த விரும்­ப­வில்லை என்றும், தாமே முன்­னின்று அவரை போரை முன்­னெ­டுக்கத் தூண்­டி­ய­தா­கவும், 2014ஆம் ஆண்டு, அத்­து­ர­லியே ரத்ன தேரர், சம்­பிக்க ரண­வக்க போன்­ற­வர்கள் கூறி­யி­ருந்­தனர்.

மாவி­லாறு அணை நோக்கி நடை­ ப­யணம் மேற்­கொள்­வ­தாக அப்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக இருந்த அத்­து­ர­லியே ரத்ன தேரரும், அக்­மீ­மன தயா­ரத்ன தேரரும் வேறு சில பௌத்த பிக்­கு­களும் கிளம்­பினர்.  

அவர்­களை அப்­போது பதில் இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்த மேஜர் ஜெனரல் நந்த மல்­ல­வா­ராச்சி, இடை­ம­றித்து மாவி­லாறைக் கைப்­பற்றி அங்கு இரா­ணுவ முகாமை அமைப்­ப­தாக வாக்­கு­றுதி அளித்தார்.

மாவி­லாறை வைத்து முழு அள­வி­லான போரை உரு­வாக்­கு­வதில் அத்­து­ர­லியே ரத்ன தேரரின் பங்கு குறைத்து மதிப்­பிட முடி­யா­தது, அதனை அவர் தனது வாயால் பல­முறை ஒப்புக் கொண்­டி­ருக்­கிறார். அதனை சம்­பிக்க ரண­வக்­கவும் கூறி­யி­ருக்­கிறார்.

விடு­த­லைப்­பு­லி­களை அழிப்­ப­தற்­காக என்ற போர்­வையில், தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக தொடுக்­கப்­பட்ட இறுதிப் போருக்­கான அடித்­தளம், அத்­து­ர­லியே ரத்ன தேரர் போன்ற பிக்­கு­களால் தான் இடப்­பட்­டது.

அதே­போன்று தான் இப்­போதும், முஸ்­லிம்­களின் அர­சி­ய­லுக்கு எதி­ரான போர், அத்­து­ர­லியே ரத்ன தேர­ரினால் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

வர­லாற்றில், தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக நிகழ்த்­தப்­பட்ட அதே­வி­த­மான ஒடுக்­கு­முறை,  இப்­போது முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நிகழ்த்­தப்­பட்­டி­ருக்­கி­றது,

அத்­து­ர­லியே ரத்ன தேரரும், ஞான­சார தேரரும் பிற பௌத்த பிக்­கு­களும், இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­துக்கு எதி­ரான போர் என்ற பெயரில் முஸ்­லிம்­களை ஒட்­டு­மொத்­த­மாக நசுக்­கவே எதிர்­பார்க்­கி­றார்கள். உயர் பத­வி­களில், முக்­கிய பொறுப்­பு­களில் இருந்து அவர்­களை வெளி­யேற்ற கையாளும் உபாயம் இது.

1981ஆம் ஆண்டு, யாழ் நூலகம் எரிப்பு மற்றும் தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக நிகழ்த்­தப்­பட்ட சிங்­கள காடை­யர்­களின் வன்­மு­றை­களை அடுத்து, அதற்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்­திலும், வெளி­யிலும் வன்­மை­யாக குரல் கொடுத்த அப்­போ­தைய எதிர்க்­கட்சித் தலைவர் அ.அமிர்­த­லிங்கம் மீது ஜே.ஆர்.ஜெய­வர்­தன அர­சாங்கம் மிக மோச­மான ஒரு நட­வ­டிக்­கையை எடுத்­தது.

எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருந்த அமிர்­த­லிங்­கத்­துக்கு எதி­ராக ஆளும்­கட்­சி­யினால் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்டு வரப்­பட்­டது. 121 உறுப்­பி­னர்­களின் ஆத­ர­வுடன் அந்தப் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது.

அந்தப் பிரே­ரணை விவா­திக்­கப்­பட்ட போது, தன் மீதான குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பாக பதி­ல­ளித்து, விளக்­க­ம­ளிக்க, எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருந்த அமிர்­த­லிங்கம் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. அப்­போது, சபா­நா­ய­க­ராக இருந்த பாக்கீர் மாக்கார் அமிர்­த­லிங்கம் பேசு­வ­தற்கு, அனு­மதி கொடுக்­க­வில்லை. பாரா­ளு­மன்­றத்தில் அப்­போது இருந்த, ஆறு முஸ்லிம் எம்.பிக்கள் அமிர்­த­லிங்­கத்­துக்கு எதி­ராக வாக்­க­ளித்­தனர்.

அப்­போது மாத்­தி­ர­மன்றி, அதற்குப் பின்னர், தமிழ் மக்கள் மீது சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம் வெறி­கொண்டு மூர்க்­கத்­த­ன­மாக தாக்­கிய போதும், வன்­மு­றை­களில் ஈடு­பட்ட போதும், முஸ்­லிம்கள் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருந்­தனர்.

இறு­திப்­போரில் தமி­ழர்­களைத் தோற்­க­டித்து, சிங்­களப் பேரி­ன­வாதம் வெற்றி கொண்­டா­டிய போது, அவர்­களும் பாற்­சோறு உண்டு மகிழ்ந்­தனர். வெடி­கொ­ளுத்தி கொண்­டா­டினர்.

அதே பேரி­ன­வா­தத்­துக்கு இன்று முஸ்­லிம்கள் இரை­யாகும் நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது. பாம்­புக்கு பால் வார்த்த கதை­யாக முடிந்­தி­ருக்­கி­றது முஸ்­லிம்­களின் நிலை.

ஈஸ்டர் குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்குப் பின்னர், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கெடு­பி­டிகள், வன்­மு­றைகள் தீவி­ர­ம­டைந்­ததை அடுத்து, வெசாக் கொண்­டாட்­டங்­களில் முஸ்­லிம்கள் காட்­டிய அக்­கறை கூட, அவர்­களை காப்­பாற்ற உத­வ­வில்லை.

வெசாக் கூடு­களைக் கட்­டியும், விகா­ரை­க­ளுக்குச் சென்றும், முஸ்­லிம்கள் இறங்கிச் செல்ல முயன்ற போதும், சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம், தனது கோர முகத்தைத் தான் காண்­பித்­தி­ருக்­கி­றது.

1983ஆம் ஆண்டு தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களைக் கண்­டித்து, பாரா­ளு­மன்­றத்தில் இருந்த தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் அனைத்து உறுப்­பி­னர்­களும் பதவி வில­கினர்.

அதே­போன்­ற­தொரு நிலை இன்று முஸ்லிம் அமைச்­சர்­க­ளுக்கு நேர்ந்­தி­ருக்­கி­றது. ஒருவர் ஒரு­வ­ராக பலிக்­கடா ஆக்­கப்­ப­டு­வதை தடுக்க, அவர்கள் கூட்­டாக எடுத்­துள்ள முடிவு சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தத்­துக்கு கொடுக்­கப்­பட்ட அடி­யாகத் தான் உள்­ளது.

ஆனாலும், அதை அவர்கள் இன்னும் சாத­க­மாகப் பார்க்க முனை­வார்கள்.

வெறும் குற்­றச்­சாட்­டு­களை வைத்துக் கொண்டு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கண்­மூ­டித்­த­ன­மாக கட்­ட­விழ்த்து விடப்­பட்­டுள்ள இன­வாதம், சுமந்­திரன் குறிப்­பிட்­டது போல நாளை இன்­னொ­ரு­வரை நோக்கிப் பாயக் கூடும்.

ஏனென்றால், இலங்கைத் தீவின் வர­லாற்றில் சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம் எப்­போ­துமே ஒரே­வி­த­மாகத் தான் இருந்து வந்­தி­ருக்­கி­றது, அதன் கோர­முகம் அவ்­வப்­போது வெளிப்­பட்டுக் கொண்டே இருக்­கி­றது,

அதற்கு தாகம் எடுக்­கின்ற போதெல்லாம், தண்­ணீ­ருக்குப் பதி­லாக இரத்­தத்­தையே  கொடுத்து வந்திருக்கிறார்கள். இப்போதும் அவ்வாறு தான் நடந்திருக்கிறது.